திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 21 அக்டோபர் 2017 (14:49 IST)

இந்தியன் 2' படத்தில் இருந்து திடீரென பின்வாங்கிய தயாரிப்பாளர்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தை தயாரிக்கவிருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் அறிவிக்கப்பட்டது., இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென தில்ராஜூ பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.



 
 
'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கர் கூறிய பட்ஜெட்டே தாறுமாறாக இருந்ததாம். ஆனால் அவர் எப்போது சொன்ன பட்ஜெட்டில் எடுத்ததில்லை என்றும் அதிகபட்சமாக இரண்டு மடங்கு பட்ஜெட் படம் முடியும்போது இருக்கும் என்று கூறப்பட்டதால் தில்ராஜூ பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தை தயாரிக்க லைகா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது,. தற்போது ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் '3.0' படத்தை தயாரித்து வரும் லைகா, 'இந்தியன் 2' படத்தையும் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.