வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (07:45 IST)

ஓடிடியிலாவது கதறவிடுவாரா இந்தியன் தாத்தா?...நெட்பிளிக்ஸில் ரிலீஸ்!

கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இதனால் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது. இந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் டிசாஸ்டர் ஆனது இந்தியன் 2.

இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று முதல் ‘இந்தியன் 2’ ஸ்ட்ரீம் ஆகிறது. திரையரங்கில் இரண்டாவது முறையாக வெளியான ட்ரிம் செய்யப்பட்ட வெர்ஷன் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. தியேட்டரில் கிளிக் ஆகாத சில படங்கள் ஓடிடியில் வரவேற்பைப் பெறும். அப்படி இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களைக் கவருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.