விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் மிஷ்கின்
விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில், இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார்.
‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசில், சமந்தா, காயத்ரி, நதியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு முதலில் ‘அநீதி கதைகள்’ என தலைப்பு வைக்கப்பட்டு, பின்னர் ‘சூப்பர் டீலக்ஸ்’ என மாற்றப்பட்டது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில், முக்கிய கேரக்டரில் மிஷ்கின் நடிக்கிறார். கோயில் பூசாரியாக அவர் நடிக்கிறாராம். நலன் குமாரசாமி, நீலன் ஷேகர் இருவரும் இந்தப் படத்துக்கு கதை எழுத, தன்னுடைய போர்ஷனை தானே எழுதியிருக்கிறாராம் மிஷ்கின்.