1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (16:46 IST)

அதிரடியாக ரைசாவை தவிர நாமினேஷன் லிஸ்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், மன அழுத்தம் காரணமாக நிகழ்ச்சியை விட்டு ஓவியா வெளியேறினார். ஜூலி வெளியேற்றப்பட்டார். தற்போது வையாபுரியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற  அனைவரையும் எனக்கு யாரும் ஓட்டுப்போடாதீங்க என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 
 
பிக்பாஸ் போட்டியாளர்களால் வையாபுரி நாமினேட்டுக்கு தேர்வானாலும், அவர்களால் சரியான காரணத்தை சொல்லமுடியவில்லை. இந்நிலையில், அனைத்து காராணங்களையும் சரியாக சொல்லி பிக்பாஸ் குடும்பத்தின் தலைவியாக  ரைசா தேர்வானார்.
 
இதையடுத்து, கிச்சன், கிளீனிங் மற்றும் வாஷிங் டீம் போன்றவற்றிற்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்தது. இதில்,  சினேகன், சக்தி மற்றும் கணேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கிச்சன் டீமுக்கு தலைவராக சினேகன் தேர்வானது காயத்ரிக்கு பிடிக்கவில்லை. மேலும், தலையாக ரைசாவை தேர்ந்தெடுத்தது சக்திக்கு பிடிக்கவில்லை.
 
இந்நிலையில் ரைசா தன் மனதில் பட்டதை அப்படியே கூறுவது, இவை அனைத்தும் ரைசா நேவி படையை உருவாக்க வைத்து  ரசிகர்களுக்கு மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துயுள்ளது.