ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 மார்ச் 2018 (22:34 IST)

பஞ்சாயத்து ஓவர் - மீண்டும் தொடங்கும் இம்சை அரசன் 24ம் புலிகேசி

இயக்குனர் சங்கர் தரப்பிற்கும் நடிகர் வடிவேலு தரப்பிற்கும் இடையேயான பஞ்சாயத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் இம்சை அரசன் 24ம் புலிகேசி பட வேலைகள் மீண்டும் துவங்க இருக்கிறது.

 
இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் வெற்றிப்பற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை, வடிவேலுவை வைத்து தயாரிக்க ஷங்கர் முடிவு செய்தார். முதல் பாகத்தை இயக்கிய சிம்பு தேவனே இயக்குனர் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு வடிவேலும் ஒப்புக்கொள்ள அவருக்கு இப்படத்தில் நடிக்க முன்பணமாக ஒன்றை கோடி தரப்பட்டு வேலை தொடங்கியது. இப்படத்தை இயக்குநர் ஷங்கர், லைக்கா நிறுவனத்துடன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
 
ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே நின்றுவிட்டது. அது சரியில்லை. இது சரியில்லை. அந்த வசனத்தை பேச மாட்டேன் என அடம் பிடித்த வடிவேலு ஷூட்டிங் வருவதை நிறுத்திவிட்டார். இதனால், 6 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட செட் வீணாகிப் போனது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. எனவே, விளக்கம் கேட்டு வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் எந்த விளக்கும் கொடுக்கவில்லை.

 
எனவே ஷங்கர் தரப்பு அழுத்தம் கொடுக்க,  வாங்கிய அட்வான்ஸ் தொகை, ரூ.6 கோடி செட், அதற்கு வட்டி என மொத்தம் ரூ. 8 கோடியை வடிவேலு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கறாட் காட்டியது. எனவே, தற்போது இறங்கி வந்த வடிவேலு, இயக்குனர் சிம்புதேவன் கூறுவதை கேட்டு அப்படியே நடித்து தருகிறேன் எனக் கூற பஞ்சாயத்து முடிவிற்கு வந்துள்ளது.
 
எனவே, இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.