ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது! – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்!

rajavuku check
Prasanth Karthick| Last Modified திங்கள், 14 அக்டோபர் 2019 (19:39 IST)
பிக்பாஸ் முடிந்து வெளிவந்த சேரன் சுடசுட தான் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார்.

இயக்குனர் சேரன் நடிப்பில் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும்போது சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளிவந்த கையோடு ’ராஜாவுக்கு செக்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை கதைகளமான இதில் சேரன் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள் போன்ற திரைப்படங்களில் போலீஸாக நடித்த சேரன் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் சேரனுடன், ஸ்ருதி டாங்கே, இர்ஃபான், நந்தனா வர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். வினோத் இசையமைத்து எம்.எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை பல்லாட்டே கோக்கட் பிலிம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :