திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (15:59 IST)

மீண்டும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி – இணையத்தைக் கலக்கும் புகைப்படம் !

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி. ஒருப் பாடலை பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் தமிழரசன் படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பாடல்களை பழனிபாரதி மற்றும் ஜெயராம் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். இந்த படத்தின் ஒருப் பாடலை 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜேசுதாஸ் பாடினார். இளையராஜா இசையில் கடைசியாக அவர் மலையாளத்தில் வெளியான பழசிராஜா படத்தில் பாடினார்.

அதையடுத்து இப்போது அதேப் படத்தில் எஸ்.பி.பி ‘வா வா மகனே’ எனும் தாலாட்டுப்பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் வெளியாகி இளையராஜா மற்றும் எஸ்.பி.பி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இருவருக்கும் இடையிலான ராயல்டி பிரச்சனைகள் முடிந்து நாளை சென்னையில் நடக்கும் இளையராஜாவின் கச்சேரியில் எஸ்.பி.பி பாட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.