திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2017 (16:36 IST)

தற்கொலைக்கு முயன்ற இலியானா.... காரணம் என்ன??

நடிகை இலியானா டோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழிலும் நடித்துள்ளார்.


 
 
தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இலியானா தனது தற்கொலை முயற்சி பற்றி வெளிபடையாக பேசியுள்ளார். 
 
ஒரு காலத்தில் எப்பொழுதும் சோர்வாகவும், கவலையாகவும் இருப்பேன். எனக்கு பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர் அதாவது உடல் தோற்றத்தில் குறைபாடு இருக்கிறதோ என்ற எண்ணம் இருந்தது. எனக்கு இது போன்ற ஒரு வகையான மனச்சிதைவு இருப்பது தெரியாது.
 
இதனால், சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்துள்ளது. தற்கொலை செய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என கருதினேன். ஆனால், அதன் பின்னர் மன அழுத்தத்திற்கான சிகிச்சைகள் எடுத்துக்கொண்ட பின் அனைத்தும் சரியானது.
 
மன அழுத்தம் என்பது கற்பனை அல்ல. அது நிஜம். அது தானாக சரியாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். அதற்கான சிகிச்சையை நிச்சயம் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.