வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (12:39 IST)

தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ

தற்கொலைக்கு முயன்ற கோவை சிறப்பு காவல்படை அதிகாரி ஸ்ரீகாந்த், தனது பேஸ்புக் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.


 

 
கோவை மாவட்டம் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் எஸ்.ஐ.ஆக பணியாற்றி வந்தவர் ஸ்ரீகாந்த் (47). இவர் நேற்று காலை சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
 
முதலில் அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியானது. ஆனால், தீபாவளி அன்று அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் அவருக்கு காவல் துறையில் பல நெருக்கடிகள் ஏற்பட்டதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது..
 
அதில், குடும்ப சூழ்நிலை காரணமாகவே தான் கோவைக்கு பணிமாற்றம் கேட்டு வந்தேன். உயர் அதிகாரிகள் செய்த தவறுகளை புகைப்படம் எடுத்து மேலிடத்திற்கு அனுப்பினேன். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக என்னை வேலூருக்கு பணியிட மாற்றம் செய்து விட்டனர்.  இந்த விவகாரத்தில் என் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் தவறுகளுக்கு என்னால் துணைப் போக முடியவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். காவல்துறையை காப்பாற்றுங்கள்” என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.