திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2017 (10:53 IST)

செல்போன் டவர் ஏறி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி: சென்னையில் பரபரப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒருவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் டவர் ஒன்றில் ராக்கி என்பவர் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி டவரில் உட்கார்ந்தபடியே அவர் தனது கழுத்தை பிளேடால் கீறியுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் இருந்து தெரியவருகிறது.
 
அதன்பின்னர் ராக்கியிடம் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து அவர் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.