வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (21:16 IST)

இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்- திரையுலகினர் அதிர்ச்சி

bhavadharani
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் காலமானார் எனத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி. இவர் என் வீட்டு சன்னல், தாலியே தேவை இல்லை, மயில் போல, மெர்க்குரிப் பூவே உள்ளிட்ட பல பாடல்களை பாடியிருந்தார்.

இளையராஜாவின் இசையில், பாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற மயில் போல போல பொண்ணு ஒன்ன்று என்ற இவர் பாடிய பாடல் இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்காக தேசிய விருதை பெற்றுத் தந்தது.

இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், பவதாரணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு,  மருத்துவம் பார்த்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக அவரை இலங்கைக்கு கொண்டு சென்றனர். இலங்கையில் அவர் காலமானார். 

இவரின் மறைவு திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகிய இரண்டு சகோதர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.