திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2024 (13:49 IST)

''ரத்னம்'' படத்தின் புதிய அப்டேட் கொடுத்த விஷால்!

ratnam -vishal -hari
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர், தாமிரபணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஹரியுடன் இணைந்துள்ளார்.

இவர்கள் இருவரும் இணையும் 3 வது படம் ரத்னம், இப்படம் ஆக்சன் ஜார்னலில் உருவாகி வரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங், தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில்  நடைபெற்றது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திக் இப்படத்தை தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரத்னம் பட  ஷூட்டிங் இன்றுடன் நிறைவடைந்தது.

இதுகுறித்து நடிகர் விஷால், ‘’ரத்னம் படத்தின் முழு ஷூட்டிங்கை முடித்து விட்டேன். ஹரி சாருடன் 3 வது முறையாகவும், டார்லிங் ஒளிப்பதிவாளார் சுகுமார் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.

இப்படத்தில் ஷுட்டிங்கிற்காக தூத்துக்குடி, திருச்சி, வேலூர், திருப்பதி, காரைக்குடி, சென்னை என பல பகுதிகளில் நேர்மறையான சூழலில் பணியாற்றியதை மறக்க முடியாது. இப்பட தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் குழுவிற்கு நன்றி, விரைவில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் டிராக் வெளியாகும். இப்படம் ஆக்சன் பிரியர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் ‘’என்று தெரிவித்துள்ளார்.