வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது அவர் ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் பகத்ஃபாசில் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
நேரம், பிரேமம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படத்திற்குப் பாட்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபகத் பாசில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.