1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (20:33 IST)

பிரசாந்த் எப்போது ஓகே சொல்வார்: காத்திருக்கும் பிரபல இயக்குனர்!

பிரசாந்த் எப்போது ஓகே சொல்வார்
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மியூசிக் திரில்லர் படமான இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க வேண்டும் என்றும் இந்த படத்தின் ஹீரோவே பியானோ இசைக் கலைஞர் என்பதால் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றும் தியாகராஜன் கருதியுள்ளார். இதனை அடுத்து இளையராஜாவிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என பிரசாத்திடம் இயக்குனர் மோகன்ராஜா கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், அதற்காக பிரசாந்த் தற்போது தினமும் 6 மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருவதாகவும் பிரசாந்த் தனது உடல் எடையை குறைத்துவிட்டு என்றைக்கு ஓகே சொல்கிறாரோ அன்றே படப்பிடிப்பு தொடங்கும் என்றும் மோகன்ராஜா தரப்பில் இருந்து கூறப்படுகிறது