திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (15:40 IST)

10 ஆண்டு இடைவெளிக்கு முற்றுப்புள்ளி – மீண்டும் இணைந்த இளையராஜா & ஜேசுதாஸ் !

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இளையராஜா இசையில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் தமிழ்ப்படம் ஒன்றிற்காகப் பாடியுள்ளார்.

இளையராஜா – எஸ்.பி. பாலசுப்ரமணியம் கூட்டணிக்கு இணையானது இளையராஜா – ஜேசுதாஸ் கூட்டணி. மலையாளத்தில் அதிகளவில் கவனம் செலுத்தினாலும் தமிழில் இளையராஜா இசையில் குறிப்பிடத்தகுந்த அளவு பாடல்களை ஜேசுதாஸ் பாடியுள்ளார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் 10 ஆண்டுகளாக இணையாமல் இருந்து வந்தனர். இருவரும் இணைந்து கடைசியாக பணிபுரிந்த படம் மலையாளத்தில் வெளியான பழசிராஜா ஆகும்.

இதையடுத்து இப்போது விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் தமிழரசன் எனும் படத்தில் ஒரு பாடலை இளையராஜா இசையில் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். இதனால் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

எஸ்என்எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இயக்கிவரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார்.