விஜய் ஆண்டனி நடிக்கும் 'காக்கி'! இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்
விஜய் ஆண்டனி நடிக்கும் 'காக்கி' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் ஆகிறது.
திமிருபிடித்தவன் படத்தை தொடர்ந்து போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் காக்கி.
ஓபன் தியேட்டர் சார்பில் தமிழினி, லிங்கவேலன் , சுகதேவ், முத்துலட்சுமி ஆகியோர் தயாரிக்கின்றனர். செந்தில் குமார் இயக்குகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சண்டை காட்சிகளை அனல் அரசு மேற்கொள்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் சத்யராஜ், ஜெய் மற்றும் ஈஸ்வரி ராவ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது.