1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (15:47 IST)

என் கணவரும் பிரசாந்த் கிஷோர் மாதிரிதான் – சன் டிவி புகழ் மோனிகா!

சன் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆன மோனிகா தன் குடும்பம் பற்றி பேசியுள்ளார்.

சன் டிவியில் வானிலை அறிக்கை வாசித்த மோனிகா அதே நிறுவனத்தில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி பிரபலமானார். திருமணத்துக்குப் பின் சீரியல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் என தலைகாட்டி வந்த இவர் பின்னர் மாயமானார்.

இடையில் என்ன ஆனது என்பது குறித்து இப்போது தெரிவித்துள்ளார். அவர் ‘கட்சி சார்பின்றி அரசியல் சம்மந்தமாகப் பேசினேன். அது பிடிக்காத சிலர் என் மகனை வைத்து என்னை மிரட்டினார்கள். அப்போது என் கணவர் வேறு வெளிநாட்டில் இருந்தார். அதனால் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கிணங்க நான் எந்த வீடியோவும் போடவில்லை. மேலும் என் கணவர் பிரசாந்த் கிஷோர் போல அரசியல் ஆலோசகராக உள்ளார். இப்போது உள்ள சூழ்நிலையில் எல்லாக் கட்சிகளுக்கும் அவரைப் போன்ற ஆட்கள் தேவைப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.