திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (11:06 IST)

இளையராஜாவின் அண்ணன் மகன் திடீர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

இளையராஜாவின் அண்ணன் மகன் திடீர் மரணம்
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் ஹோமோ ஜோ என்பவர் உடல்நலக்குறைவால் காலமானதால், இளையராஜாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் ஹோமோ ஜோ. இவர் பிரபல இயக்குனர் ஆர்வி உதயகுமார் அவர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றினார். ஆர்வி உதயகுமாரின் கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர் உட்பட ஒரு சில படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஹோமோ ஜோ, ‘கற்க கசடற’ என்ற படத்திற்கு வசனம் எழுதினார்
 
மேலும் இவர் தனது முதல் திரைப்படமான ’நாலு பேரும் ரொம்ப நல்லவங்க’ என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் திடீரென தற்போது அவர் முதல் படத்தை முடிக்காமலேயே காலமாகிவிட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் ஹோமோ ஜோ கடந்த சில நாட்களாக உடல் நலம் இல்லாமல் இருந்ததாகவும் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என்றும், அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இளையராஜா அண்ணன் மகனின் மறைவை அடுத்து பிரபல திரை உலக பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்