புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (07:59 IST)

தல தோனியும் இசைஞானியும் இணைந்த அபூர்வ வீடியோ: இணையத்தில் வைரல்

தல தோனியும் இசைஞானியும் இணைந்த அபூர்வ வீடியோ
கிரிக்கெட் ரசிகர்கள் அன்புடன் ’தல’ என்று அழைத்து வரும் தோனியும் இசை உலக மேதை இசைஞானி இளையராஜாவின் இசையும் இணைந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று இசைஞானி இளையராஜா அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரையுலக பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் இளையராஜா பிறந்தநாள் வாழ்த்துக்கள் குறித்த ஹேஷ்டேக் நேற்று டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் தல தோனி அவர்கள் டிராக்டர் ஓட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பின்னணி இசையாக இசைஞானி இளையராஜாவின் அபாரமான பின்னணி இசை ஒலிக்கின்றது. தல தோனியின் டிராக்டர் ஓட்டும் ஸ்டைலும், இசைஞானியின் அருமையான பின்னணி இசையும் இணைந்த இந்த வீடியோவை லட்சக்கணக்கான தோனி மற்றும் இளையராஜா ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இதனை அடுத்து இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது