வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 அக்டோபர் 2018 (07:16 IST)

முதல்வராக நடிக்கவில்லை, முதல்வரானால் நடிக்க மாட்டேன்: சர்கார் விழாவில் விஜய்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன், நடிகர், விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் விஜய் பேசியபோது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரசன்னா, 'நீங்கள் இந்த படத்தில் முதல்வராக நடித்துள்ளீர்களா? என்ற கேள்வியை கேட்டு, ஒருவேளை நீங்கள் முதல்வரானால் என்ன செய்வீர்கள்' என்றார்

 
அதற்கு பதிலளித்த விஜய், 'இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால், முதல்வராக நடிக்க மாட்டேன், ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன், ஆனால் அது முடியுமா? என்று தெரியவில்லை' என்று கூறினார்.