திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (13:51 IST)

பிக் பாஸ் ஆரவ் எடுத்த அடுத்த அவதாரம்!

பிக் பாஸ் முதல் சீசனில் வெற்றியாளராக தேர்வானவர் ஆரவ். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, தன் சக போட்டியாளரான நடிகை ஓவியாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். 
 

 
ஆனாலும், தானும் ஓவியாவும் நல்ல நண்பர்கள் எனக் கூறி வருகிறார் ஆரவ். தற்போது தமிழில் அவர் ராஜபீமா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஆரவ் தனது சொந்தக்குரலில் ஒரு பாடலை பாடி, பாடகர் என்ற புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார். 
 
சைமன் இசையமைப்பில் உருவான இந்த பாடல் உள்பட இந்த படத்தின் அனைத்து பாடல்களும்  விரைவில் வெளியாகவுள்ளது.