1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (13:51 IST)

'பீஸ்ட்’ படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்ப்பேன்: கிருத்திகா உதயநிதி

kiruthika
தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பேன் என இயக்குனர் கிருத்திகா உதயநிதி பேட்டி அளித்துள்ளார் 
 
இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது ஒரு வெப்தொடரை இயக்கி வருகிறார்
 
பேப்பர் ராக்கெட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த கிருத்திகா உதயநிதி, விஜய்யின் 'பீஸ்ட்’  படத்தை கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சியை நண்பர்களுடன் இணைந்து பார்ப்பேன் என்றும் விஜய் மற்றும் நெல்சன் இருவருக்குமே காமெடி சென்ச் அதிகமாக இருப்பதால் இந்த படம் காமெடியில் கலக்கும் என்றும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் அவர் கணித்துள்ளார்