ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (09:55 IST)

மீண்டும் ஒரு முன்னணி ஹீரோ படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள டான் படத்தை  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்டு இருந்த நிலையில் அந்த தேதியில் ’ஆர்.ஆர்.ஆர்.’  திரைப்படம் ரிலீஸ் ஆனதால் டான் திரைப்படம் மே 13 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து இப்போது இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இது சம்மந்தமாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், கமலின் விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களை அடுத்தடுத்து ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.