புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (16:39 IST)

மீண்டும் உருவாகிறது மிருகம் படத்தின் இரண்டாம் பாகம் – கதாநாயகன் இவர்தானா?

மிருகம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ஆர் கே சுரேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சர்ச்சையான கதைகளை இயக்கி புகழ்பெற்றவர் சாமி. இவர் இயக்கிய உயிர், மிருகம், சிந்து சமவெளி ஆகிய படங்கள் பெரிதும் சர்ச்சைகளைக் கிளப்பிய படங்களாக அமைந்தன. இதையடுத்து அவர் இப்போது 2007 ஆம் ஆண்டு தான் இயக்கிய மிருகம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம். முதல் பாகத்தில் நடித்த் ஆதிக்கு பதிலாக இப்போது ஆர் கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளியின் கதையாக மிருகம் படத்தை அவர் உருவாக்கி இருந்தார்.