வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (16:49 IST)

சிவாஜியை ஓவராகக் கலாய்த்த நகைச்சுவை கலைஞர்கள்… கடுப்பான பிரபு – அதிரடி முடிவு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜியை கலாய்த்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இதில் தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளை மிமிக்ரி செய்து கலாய்ப்பது வாடிக்கை. இந்நிலையில் சமீபத்தில் இதில் சிவாஜியை மிமிக்ரி செய்து ஒளிபரப்பான நிகழ்ச்சி அதன் எல்லையை தாண்டியுள்ளது. இதனால் இந்த விவகாரம் சிவாஜி ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவர்கள் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தினரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளனர். அதையடுத்து இனிமேல் எந்த நிகழ்ச்சியிலும் சிவாஜியை கேலி செய்ய மாட்டோம் என நிகழ்ச்சிக் குழுவினர் உறுதி அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.