வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (19:30 IST)

திருமணம் பற்றி எனக்கு பயம் இருந்தது- நடிகர் அசோக் செல்வன்

blue star- ashok selvan- keerthy pandiyan
ப்ளூ ஸ்டார் படம் வெற்றியடைந்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். இந்த நிலையில்,  தன் மனைவி கீர்த்தி பாண்டியன் பற்றி அவர் மனம் திறந்துள்ளார்  அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான படம் ப்ளூ ஸ்டார்.
இவர்களுடன் இணைந்து,  இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25 ஆம் தேதி வெளியானது.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள நிலையில்  ரசிகர்கள் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் ப்ளூஸ்டார் படம் வெற்றியடைந்துள்ள நிலையில், இந்த  வெற்றியை படக்குழுவினர் இன்று கொண்டாடினர்.

இதுகுறித்து நடிகர் அசோக் செல்வன், ப்ளூ ஸ்டார் படம் பற்றி அவர் கூறியிருந்த நிலையில்,

தன் மனைவி கீர்த்தி பாண்டியன் பற்றி அவர் மனம் திறந்துள்ளார்.

அதில், ப்ளூ ஸ்டார் படப்பிடிப்பின்போது நானும், கீர்த்தியும் காதலர்களாக இருந்தோம். அதனால் கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்தது. அப்போது திருமணம் பற்றி எனக்கு பயம் இருந்தது. நம்மால் முடியுமா என்று தோன்றியது. ஆனால், கீர்த்தி கீர்த்தி எனக்கானவள் என்ற உணர்வு வந்த பிறகு, அந்த பயம் போய்விட்டது. திருமணம் செய்துகொள்வதற்கான தைரியத்தை கொடுத்தது அவர்தான் என்று தெரிவித்துள்ளார்.