1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. former minsiter jayakumar says about ttv dinakaran

டிடிவி தினகரன் ஒரு பொருட்டே இல்லை: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஜெயக்குமார்..!

டிடிவி தினகரன்
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று கூடியது 
 
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது, ‘அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக தமிழகத்தில் இருக்கும், மாநில உரிமையை பேணி காக்கும் தேர்தல் அறிக்கையாக இருக்கும்.
 
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. உரிய நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்
 
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, மண்டல வாரியாக மக்கள் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க அதிமுக திட்டம் போடப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டை 7 மண்டலங்களாக பிரித்து மக்களிடம் அதிமுக கருத்து கேட்க உள்ளது. அதன்பின்னர் சூப்பர் ஹீரோ தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திருப்பதியை விட அதிகமாகிறதா ராமர் கோவில் வருமானம்.. ஒரே நாளில் எத்தனை கோடி தெரியுமா?