புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (17:37 IST)

ப்ளூ ஸ்டார்: இதுவரை இப்படி ஒரு வரவேற்பை பார்த்ததில்லை- அசோக் செல்வன்

Blue star
ப்ளூஸ்டார் படம் வெற்றியடைந்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். இந்த நிலையில், ''அடித்தட்டு மக்களையும் இணைப்பது மாதிரியான கதாப்பாத்திரத்தில் நான் இப்போதுதான் நடித்துள்ளேன் என்பதை நான் உணர்கிறேன் ''என்று அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான படம் ப்ளூ ஸ்டார்.
இவர்களுடன் இணைந்து,  இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25 ஆம் தேதி வெளியானது.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள நிலையில்  ரசிகர்கள் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் ப்ளூஸ்டார் படம் வெற்றியடைந்துள்ள நிலையில், இந்த  வெற்றியை படக்குழுவினர் இன்று கொண்டாடினர்.

இதுகுறித்து நடிகர் அசோக் செல்வன், ப்ளூ ஸ்டார் படம் எனது 19வது படம். இதுவரை இப்படி ஒரு வரவேற்பை பார்த்ததில்லை. என் படத்தில் அறிமுகம் காட்சிக்கு ரசிகர்கள் விசிலடிப்பது இதுதான் முதல்முறை. அடித்தட்டு மக்களையும் இணைப்பது மாதிரியான கதாப்பாத்திரத்தில் நான் இப்போதுதான் நடித்துள்ளேன் என்பதை நான் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.