வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (19:53 IST)

’தி வாரியர்’ படத்தின் அடுத்த சிங்கிள் தேதி அறிவிப்பு!

தி வாரியர்’ படத்தின் அடுத்த சிங்கிள் தேதி அறிவிப்பு!
லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தி வாரியர்’. இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடலை சிம்பு பாடியிருந்தார் என்பதும் அந்த பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே .
 
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘தாதா தாதா ‘ என்று தொடங்கும் பாடல் ஜூன் 4-ஆம் தேதி 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
 
ராம் பொத்தினேனி, ஆதி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது