''அனைவரின் பாதம் தொட்டு நன்றியுடன் வணங்குகிறேன்’’- நடிகர் பார்த்திபன்
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வரலாறு காணாத மழையினால் இங்கு சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப் படையினர், போலீஸார் மீட்டு முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.
சென்னையில் அடையாறு மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் விமானப் படையின் 2 இலகுரக ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாளையும் இப்பணி தொடரும் என பாதுகாப்புப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த இக்கட்டானன சூழலில் உதவும் ரியல் ஹீரோ, ஹீரோயின் அனைவரின் பாதம் தொட்டு நன்றியுடன் வணங்குகிறேன் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
கட்சி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் இவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு,இதுபோன்ற இடர் காலங்களில் அக்கம் பக்கம் உள்ள இளைஞர்கள்,தாய்மை நிறைந்தவர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகளே தண்ணீருக்கிடையில் தாகம் தீர்ப்பதாகும்.அப்படிப் பட்ட ரியல் ஹீரோ/ ஹீரோயின் அனைவரின் பாதம் தொட்டு
நன்றியுடன் வணங்குகிறேன்என்று தெரிவித்துள்ளார்.