1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (21:26 IST)

வங்கக் கடலில் ஹாமூன் புயல்-இந்திய வானிலை ஆய்வு மையம்

 Cyclone
வங்கக் கடலில் ஹாமூன் புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடலில்  மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக இன்று வலுப்பெற்றுள்ளது.

ஈரான் நாடு  இந்தப் புயலுக்கு ஹாமூன் என்று பெயர் பரிந்துரைத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.