1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (07:56 IST)

முதலமைச்சர் ஸ்டாலினை எனது மகனாக பார்க்கிறேன்: எம்ஜிஆர், சிவாஜி கால நடிகை பேட்டி!

vanisri
முதலமைச்சர் ஸ்டாலினை எனது மகனாக பார்க்கிறேன்: எம்ஜிஆர், சிவாஜி கால நடிகை பேட்டி!
எம்ஜிஆர் சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை எனது மகனாக பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 
எம்ஜிஆர் நடித்த ஊருக்கு உழைப்பவன், கண்ணன் என் காதலன் சிவாஜி கணேசன் நடித்த வாணி ராணி, வசந்த மாளிகை உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை வாணிஸ்ரீ 
 
தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த இவருக்கு சென்னை அமைந்தகரையில் ரூபாய் 20 கோடி மதிப்புள்ள சொத்து இருந்தது. இந்த சொத்தை தனது பெயருக்கு வேறொருவர் மாற்றிக் கொண்டதை அடுத்து இவர் கடந்த 20 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். 
 
இந்த நிலையில் மோசடியாக பதிவு செய்த ஆவணங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் வாணிஸ்ரீயின் சொத்துக்கள் மீண்டும் அவருக்கு கிடைத்துள்ளது
 
இது குறித்த ஆவணத்தை நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வாணிஸ்ரீ இடம் அளித்துள்ள நிலையில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை எனது மகனாக பார்க்கின்றேன் என்றும், மீட்கவே முடியாது என்று நினைத்திருந்த நேரத்தில் எனது நிலத்தை மீட்டுக் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்