திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (22:58 IST)

இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு வாகன விபத்தில் 7 பேர் பலி !குடியரசு தலைவர் இரங்கல்

himachal
இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்சார் என்ற பள்ளத்தாக்கின் கியாகி பகுதியில்  ஒரு வாகனம் கழிந்து விபத்து ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம் மாநிலம் குல்லு மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் பள்ளத் தாக்கில் உள்ள கியாகி என்ற பகுதியில்  நேற்றிரவு ஒரு வாகனம் கழிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில். இமாச்சல பிரதேச மா நில விபத்து குறித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், இமாச்சல்பிரதேச மாநில  குலுவில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 7  பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.