செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2018 (19:35 IST)

தயாரிப்பாளர்களாக மாறிய ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள்

‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இருவரும் தயாரிப்பாளர்களாக மாறியுள்ளனர்.

 
மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படத்தை புஷ்கர் - காயத்ரி இயக்கியிருந்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர்களின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு பயங்கரமாக நிலவி வருகிறது.
 
இந்நிலையில், இருவரும் ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். ‘பூவரசம் பீப்பி’ படத்தை இயக்கிய ஹலிதா சலீம் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். தற்போது திரைக்கதையில் கவனம் செலுத்திவரும் ஹலிதா, மார்ச் மாதத்தில் அதை முடித்துவிடுவார். ஜூன் முதல் ஷூட்டிங் செல்ல முடிவு செய்துள்ளனர்.