முதன்முறையாக இரண்டு வேடங்களில் விக்ரம் பிரபு
விக்ரம்பிரபு முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள படம் ‘பக்கா’. இந்தப் படத்தில் ஹீரோயினாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார். ‘நெருப்புடா’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
பிந்து மாதவி இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகவும் விக்ரம்பிரபு நடித்துள்ளார். ஆம், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம்பிரபு.
சூரி, ஆனந்தராஜ், சதீஷ், ரவிமரியா, சிங்கம்புலி, நிழல்கள் ரவி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சரவணன் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ரசிகையாக நடித்துள்ளார் நிக்கி கல்ரானி.