திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (20:43 IST)

அந்த நடிகையின் படத்திலிருந்து விலகிவிட்டேன்...மற்றவர்களுக்கு வாழ்த்துகள் - பி.சி.ஸ்ரீராம்

இந்திய சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம். இவர் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் தமிழ் ,இந்தி, மலையாளம், போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் அவர் ஒரு பதியில் தான் கங்கனா ரனாவத் படத்திலிருந்து விலகி விட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் தான் ஏன் பணியாற்றவில்லை என்று தயாரிப்பாளருக்கு விளக்கிவிட்டதாகவும் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக கங்கன அரசியல்வாதிகள் மற்றும் வாரிசு நடிகர்களுக்கு எதிராகப் புகார்களைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.