செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:20 IST)

சர்வதேச திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான சமந்தா!

சர்வதேச திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான சமந்தா!
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா முதல் முறையாக சர்வதேச திரைப்பட மொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் 
 
‘அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ்’ என்ற பெயரில் பிலிப்ஸ்ஜான் என்பவர் இயக்க இருக்கும் வெப்தொடர் ஒன்றில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் ஒரு தமிழ் பெண்ணாக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் அவருக்கு சர்வதேச அளவில் புகழை பெற்று தரும் என்றும் கூறப்படுகிறது
 
‘தி ஃபேமிலிமேன்’ என்ற தொடரில் சமந்தாவின் அபாரமான நடிப்பை பார்த்தே சமந்தாவுக்கு இந்த வாய்ப்பை இயக்குனர் பிலிப்ஸ்ஜான் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது அரண்
 
‘அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ்’ என்ற படத்தில் நடிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் என்னை தேர்வு செய்த இயக்குனர் பிலிப்ஸ்ஜான் அவர்களுக்கு நன்றி என்றும் இந்த அற்புதமான பயணத்திற்காக காத்திருக்கின்றேன் என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.