வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (12:50 IST)

பிடிவாதத்தால் நிறைய படங்களை இழந்தேன் - நடிகை மனிஷா யாதவ்

எனது பிடிவாதத்தால் நான் நிறைய படங்களை இழந்துவிட்டேன் என நடிகை மனிஷா யாதவ் கூறியுள்ளார்.
நடிகை மனிஷா யாதவ், வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ஒரு குப்பை கதை படத்தில் நடித்து பெரும் புகழை பெற்றார்.
 
இந்நிலையில் மனிஷா யாதவ் பேசியபோது மிகப்பெரிய டைரக்டர்களின் படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்.  என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே நான் ஒப்புக்கொள்வேன். அதே போல் என்னுடைய நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன்.
 
இனிவரும் காலங்களில் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என மனிஷா யாதவ் கூறினார்.