செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (11:59 IST)

திருமணமாகிட்டா என்னங்க... சமந்தாவின் அதிரடி பதில்

பொதுவாக திரையுலகில் திருமணமான நடிகைக்கு வரவேற்பு இருப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதனால் முன்னணி நடிகையாக இருப்பவர்கள் கூட திருமணம் ஆன பின்பு அம்மா, அண்ணி, அக்கா போன்ற கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் நடிகை சமந்தா திருமணமான பின்பு இன்றும்  முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். 
இது தொடர்பாக சமந்தா கூறியதாவது: "நான் பத்து வருஷமாக கதாநாயகியாக நடிப்பது பலரும் பெரிய விஷயமாக நினைக்கிறார்கள். என்னை மாதிரியே  இன்னும் சில நடிகைகள் நடித்து வருகிறார்கள். பொதுவாக திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்து விடும் என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை  உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கேற்ப திருமணமான பின்பு எனது படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. திருமணமான பின்பு மார்க்கெட் நடிகைகளுக்கு இருக்காது என்ற மாயையை இங்கு உள்ளவர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள் . ஆனால் ரசிகர்கள் அப்படி நினைக்கவில்லை என்பது என்  படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. 
 
எனக்கு முன்பும் பல நடிகைகள் திருமணம் ஆன பின்பு சாதித்துள்ளார்கள். விமர்சனங்கள் தான் என்னை பெரிதும் உயர்த்துகின்றன. என்னால் முடியாது என்று ஒரு கேரக்டரை சொன்னால், அந்த கேரக்டரை எடுத்து நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக கடின உழைப்பை செலுத்துவேன். எனவே விமர்சனங்கள்  தான் என்னை உயர்த்துகிறது" இவ்வாறு கூறினார்.