ஆரவ்வின் இந்த செயலால் நெட்டிசன்கள் பாராட்டு
ஆரவ்வின் இந்த செயலால் அவரை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார் ஆரவ். பிக் பாஸ் டைட்டிலை வென்றவர். அவர் தற்போது 2 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் அவர் பனையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார்.
பனையூரில் உள்ள மன வளர்ச்சி குன்றிய பள்ளிக்கு சென்று குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆரவ். அந்த குழந்தைகள் நம்மை போன்று ஆக உதவி செய்வோமாக என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர். நல்ல விஷயம் செய்திருக்கிறீர்கள் ஆரவ் என்று வாழ்த்தியுள்ளனர். எனக்கு வர வர கமெண்ட் பண்றதுக்கு வார்த்தை இல்லாம போகுது, நீங்க தான் காரணம் ப்ரோ... நீங்க அடிக்கடி என்ன ஷட்ஆப் பண்ண வச்சிறீங்க... உங்களின் ரசிகர்கள் என்பதில் பெருமை அடைகிறோம் என்றும், மேலும் சிலர் உங்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது, என் இதயத்தை தொட்டுவிட்டீர்கள் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.