''ரஜினி, அமிதாப் பச்சன் போல் அதிகம் சம்பளம் வாங்கினேன்''- விஜயசாந்தி
தமிழ் சினிமாவில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான படம் கல்லுக்குள் ஈரம். இப்படத்தை பாரதி ராஜா இயக்கினார். இப்படத்தில் கதா நாயகியாக விஜயசாந்தி அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, ராஜாங்கம், நெற்றிக்கண், மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
அதேபோல் தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையானார்.
சமீபத்தில் நடிகை விஜயசாந்தி அளித்த பேட்டியில், நான் அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறேன். அதிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்கப் பிடிக்கும்! நான் சினிமாவில் முதன் முதலில் வாங்கிய சம்பளம் ரூ.3 ஆயிரம்! அன்றைய காலத்தில் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகளில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுன் நானும் இருந்தாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சினிமா பணிக்கிடையே பல விபத்துகளில் இருந்து தான் தப்பித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.