வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (22:01 IST)

நான் ஏன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை: நடிகை விஜயசாந்தி

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நடிகை விஜயசாந்தி கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானா மாநிலம் அமைய முக்கிய காரணமாக இருந்த இவர் கடைசி நேரத்தில் சந்திரசேகரராவ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததால் அமைச்சர் ஆகும் வாய்ப்பை இழந்தார்.
 
இந்த நிலையில் தெலுங்கானா மக்கள் தான் தனது குழந்தைகள் என்றும் அந்த குழந்தைகளுக்காக நான் குழந்தையே பெற்று கொள்ளவில்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 
 
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் என்று கூறிய விஜயசாந்தி, வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முயன்றால் அதனை கடுமையாக எதிர்ப்பேன் என்றும் தெரிவித்தார்.