இதுதான் சூப்பர் ஸ்டார்… குருவே சரணம் – ராகவா லாரன்ஸ் உருக்கம்!

Last Modified வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:04 IST)
 

ரசிகருக்காக ரஜினி பேசி வெளியிட்ட ஆடியோ குறித்து அவரது ரசிகர் ராகவா லாரன்ஸ் டிவீட் செய்துள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர் ஒருவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தான் இனிமேல் பிழைக்க மாட்டேன் என்று எண்ணி ரஜினிக்கு ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்.
 
இந்த நிலைய்ல் ரஜினிகாந்த் இந்த ட்விட்டை பார்த்ததும் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நீங்கள் நிச்சயம் நலமாக திரும்புவீர்கள் என்றும் உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் நலமுடன் வீடு திரும்பியவுடன் உங்களை நான் சந்திக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றும் எனது வீட்டுக்கு வாருங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் அந்த ரசிகர் அந்த ஆடியோவை கேட்டுள்ளார். அந்த ஆடியோவை கேட்டதும் அவருக்கு சில மணி நேரங்களில் கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ரஜினியின் ஆடியோ குறித்து உருக்கமாக பேசியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். தன் டிவிட்டர் பக்கத்தில் ‘இதுதான் நம் தலைவர்…அவர் எப்போதும் தன் ரசிகர்கள் பிரச்சனையில் இருக்கும் போது கைகொடுக்க தவறமாட்டார். அந்த ஆடியோவை நான் கேட்கும் போது நிறைய பாசிட்டிவ் எண்ணங்களையும் அன்பையும்  கொடுக்கிறது. அப்படி என்றால் அந்த ரசிகருக்கு எப்படி இருந்திருக்கும். லவ் யூ தலைவா… குருவே சரணம்’ எனக் கூறியுள்ளார்.

 இதில் மேலும் படிக்கவும் :