வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 மே 2020 (18:06 IST)

’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நான் நடிக்கவில்லை: பூஜா குமார்

’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நான் நடிக்கவில்லை
கமலஹாசன் நடித்த உள்ள ’தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்தில் பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியாநடிக்க உள்ளதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக செய்திகள் வெளி வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் ’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் இப்பொழுது வரை அந்த படத்தின் குழுவினர் யாரும் தன்னிடம் நடிக்க அழைப்பு விடுக்கவில்லை என்று பூஜாகுமார் கூறியுள்ளர்
 
மேலும் ஒரு வேளை இனிமேல் தன்னை படக்குழுவினர் அணுகலாம் என்றும் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுகுறித்து அறிவிக்கும் வரை இந்த செய்தி உறுதி செய்யப்பட்டதல்ல என்றும் கூறினார். மேலும் அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் தனக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, ரேவதி, வைகைப்புயல் வடிவேலு, ஆகியோர் நடித்த உள்ளது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது