உங்களை பார்த்து பொறாமை பட்டேன் ..மோகன்லால் பிறந்தநாள் ! வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

kamalhasan mohallal
sinoj| Last Updated: வியாழன், 21 மே 2020 (17:39 IST)

மாலிவுட் என்று அழைக்கப்படும் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மோகன்கால். நடிப்பில் அசுரத்தனமாக அவர் வெளிப்படுத்தும் முகபாவங்கள், பேச்சு, அவரது நடிப்பு, இதற்கென்றே இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உண்டு, இந்நிலையில் மோகன்லால் இன்று தனது 60வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார்.

மோகன் லால் பிறந்தநாளை
முன்னிட்டு பல பிரபலங்களும் நட்சத்திரங்களும்
அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் மோகன் லால் பிறந்தநாளுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில்
வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், அன்புக்குரிய மிஸ்டர் மோகன்லால் நான் உங்களுடைய முதல் படத்திலேயே உங்களை விரும்பினேன். உங்களுடைய தொடர்ந்த தரமான படங்களுக்காக நான் உங்கள் மீது பொறாமை பட்டேன் அதுவும் உங்களது ஒவ்வொரு திருப்பத்திலும். நான் உங்களுடன் பணியாற்றிய போதும் மேலும் விரும்பினேன்.என் இளைய தம்பி நீண்ட நாள் வாழ்க என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :