திருமணமே வேண்டாம்,வருஷத்துக்கு ஒருத்தர்:ஸ்ரீரெட்டியின் அசத்தல் பாலிசி

Last Updated: திங்கள், 10 ஜூன் 2019 (19:00 IST)
தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை எனவும், வருடத்துக்கு ஒருவரை காதலிப்பேன் எனவும் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி பகிர்ந்துள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல நடிகை ஸ்ரீரெட்டி பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் கடந்த சில மாதங்களாகவே  சினிமாத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகளை பற்றியும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் என் பெற்றோரைத் தவிற வேறு யாரையும் நேசிக்கமுடியாது என்றும், அப்படியும் யாரையாவது பிடித்தால் குறைந்தபட்சம் ஒரு வருடம் தான் ஒன்றாக இருக்கமுடியும் என்றும் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் அவர் எல்லா நேரத்திலும் புதிய காதல் வேண்டும் என்றும் விளையாட்டு பெண்ணாக கமிட்மெண்ட் இல்லாத பெண்ணாக இருப்பதே விருப்பம் எனவும் பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீரெட்டியின் இந்த முகநூல் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :