1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2023 (13:31 IST)

பணிவு இருக்கும் அதே அளவு நியாயமான கோபமும் இருக்கும்- விஜயகாந்த் பற்றி கமல் பேட்டி

Vijayakanth
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடலுக்கு, சினிமாத்துறையினர், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்றிரவு விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி, பார்த்திபன், நளினி, குஷ்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய பின் மக்கள் நீதி மக்கம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பேட்டியளித்தார்.
 
kamalhaasan

அப்போது அவர் கூறியதாவது: ''எளிமை, அன்பு, உழைப்பு, பெருந்தன்மை ஆகிய வார்த்தைகளுக்கு பொருத்தமானவர் விஜயகாந்த். ஆரம்ப காலகட்டத்தில் எப்படி பழகினாரோ, அதேபோல் தான் கடைசி வரை பழகினார். பணிவு இருக்கும் அதே அளவு நியாயமான அளவு கோபமும் இருக்கும். அந்த நியாமான கோபம்தான் மக்களின் நலனுக்காக போராட வைத்தது. அவரை ஒரு நல்ல மனிதர் இனியும் இல்லை. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.