1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (21:31 IST)

கீர்த்தி சுரேஷின் படங்கள் எப்படி ரிலீஸாகிறது..? ரசிகர்களின் கேள்விக்கு பதில் !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷின் திரைப்படங்கள் ஒடிடியில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் விஜய்,  தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவரது நடிப்பில் சமீபத்தில் பெண்குயின் திரைப்படம் வெளியானது. இதனைத்தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள குட்லக் சகி, மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்கள்  ஒடிடியில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும் நிதினுக்கு ஜோடியாக நடித்துள்ள ரங் தே படமும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.