எமி ஜாக்சனிடம் காதலை கூறிய ஹாலிவுட் நடிகர்
தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய், இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் மதராசப்பட்டினம். இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
இப்படத்தின் வெற்றிக்குப் பின் தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன், 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான மிஷன் சாப்ட 1 என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை எமிஜாசன் காதலித்து வந்த நிலையில், திருமணம் நிச்சயமாகி, இருவருக்கும் திருமணம் ஆகாமலேயே குழந்தை பிறந்தது. இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
எனவே தனது மகன் ஆண்டியாசுடன் எமிஜாக்சன் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், எமி ஜாக்சன், ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் சவிட்சர்லாந்தில் உள்ள பனி படர்ந்த ஆற்றுப்பாலம் ஒன்றில், தன் காதலை எமி ஜாக்சனிடம் வெளிப்படுத்தினார்.
இதை எமிஜாசன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இவர்களுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.