வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (14:11 IST)

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே துணை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

டி பார்த்திபன் இயக்கத்தில் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி புதிதாக உருவாகியுள்ள காமெடி திரைப்படம் தான் நட்பே துணை. இது ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். 


 
அனகா ஹீரோயின் வேடத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஆதிக்கு இணையான மிரட்டலான வேடத்தில் இயக்குனர்கள் கரு பழனியப்பன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இவர்களைத் தவிர ஹரிஷ் உத்தமன், ஆர் ஜே விக்னேஷ் காந்த், எருமை சாணி விஜய், அஜய் கோஸ், சுட்டி அரவிந்த், புட் சட்னி ராஜ்மோகன், பிஜி ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர் சி யின் அவினி மூவிஸ் நகைச்சுவையான இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்க்கு இசை அமைத்துள்ளார். அரவிந்த் சிங் நட்பே துணை  படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் எப்போது படம் ரிலீஸ் என்பது குறித்து  தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஏப்ரல் 4ஆம் தேதி நட்பே துணை படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.